×

கலெக்டர் அலுவலகம் முன்பாக தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன.7: தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈஸ்வரன், கென்னடி, பசும்பொன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் இளையராஜா சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸ் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சிவராமன், பெருமாள், சுருளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Theni ,Theni District Collector ,Tamil Nadu Democratic Construction Workers' Union ,Easwaran, Kennedy and Pasumpon ,District Secretary ,Ilayaraja ,
× RELATED கூரை வீட்டில் திடீர் தீ