×

இளைஞர்களுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள்

நாமகிரிப்பேட்டை, ஜன.8: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியில், அப்பகுதி இளைஞர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில், ‘இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடுவது அவர்களின் உடல் நலம் மட்டுமின்றி மன உறுதி, ஒழுக்கம் மற்றும் தலைமை திறனை வளர்க்கும். கிராமப்புற பகுதிகளில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வர தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க இளைஞர்கள், தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, பேரூர் திமுக செயலாளர் ஜெயக்குமார், பேரூராட்சி தலைவர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Namakiripettai ,R. Pudupatti Panchayat ,Adi Dravidar ,Welfare ,Minister ,Mathivendan ,
× RELATED வேன் கவிழ்ந்து விவசாயி பலி