- Ilampillai
- முதன்மை வேளாண் கூட்டுறவு கடன்
- கல்பரப்பட்டி
- வீரபாண்டி வடக்கு ஒன்றியம்
- சேலம் கிழக்கு மாவட்டம்
- கிழக்கு மாவட்ட திமுக...
இளம்பிள்ளை, ஜன.8: சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம் கல்பாரப்பட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில். 7 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.60 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி., கலந்து கொண்டு, வங்கி காசோலைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் வீரபாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ராமாபுரம் சதீஷ்குமார், நிர்வாகிகள் ஆறுமுகம், ரங்கசாமி, பழனிச்சாமி, கூட்டுறவு சங்க செயலாட்சியர் சசிகுமார், செயலாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
