×

புதுப்பிக்கப்பட்ட அரசு பஸ் இயக்கம்

காவேரிப்பட்டணம், ஜன.8: கிருஷ்ணகிரி – பனகமுட்லு இடையே புதுப்பிக்கப்பட்ட அரசு பஸ் இயக்கப்பட்டது. ஜெகதாப் கிராமத்தில் இந்த பஸ்சுக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர். கிருஷ்ணகிரி முதல் பனகமுட்லு வரை காவேரிப்பட்டணம், ஜெகதாப் வழியாக, பழைய பஸ்சுக்கு மாற்றாக, புதுப்பிக்கப்பட்ட அரசு பஸ் இயக்கப்பட்டது. புதிய பஸ் சேவை தொடங்கியதையொட்டி, ஜெகதாப் பகுதி பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து பஸ்சை வரவேற்றனர். புதிய அரசு பஸ் இயக்கப்படுவதால் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பெரிதும் பயனடைவார்கள். பயண பாதுகாப்பு, நேர்த்தியான சேவை மற்றும் வசதியான பயணம் கிடைக்கும். தொடர்ந்து இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில், ஊர் கவுண்டர் காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கன்னியம்மாள் ராமமூர்த்தி, கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர் சென்னப்பன், பூசாரி சென்னப்பன், கார்த்திக், நாட்டாண்மை கவுண்டர் துரைசாமி, மந்திரி கவுண்டர் கணேசன், ஓரிகை கவுண்டர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kaveripatnam ,Krishnagiri ,Panagamudlu ,Jagadap ,Kaveripatnam, ,
× RELATED மஞ்சள் அறுவடைக்கு முன்பதிவு