- கிருஷ்ணகிரி
- குறள் எழுத்தாளர் மாநாடு
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- கலெக்டர்
- தினேஷ் குமார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குறள்வார விழா
கிருஷ்ணகிரி, ஜன.8: குறளாசிரியர் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான எழுத்துத்தேர்வு, நாளை (9ம் தேதி) கிருஷ்ணகிரியில் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில், 2026 ஜனவரி மாதத்தில் குறள்வார விழாவினை நடத்த அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 21ம் தேதி குறளாசிரியர் மாநாடு நடத்த, தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 15 ஆசிரியர்கள் (அரசு, அரசு உதவிபெறும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்கள்), 15 அரசு ஊழியர்கள் (அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து துறை, அனைத்து நிலை அலுவலர்கள், ஊழியர்கள்) என மொத்தம் 30 பேர், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.
15 ஆசிரியர்கள் மற்றும் 15 அரசு ஊழியர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு, நாளை (9ம் தேதி) பிற்பகல் 2 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள், தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு வருகை புரிய வேண்டும். தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் கியூஆர் குறியீடு வழியாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யாதவர்கள் தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 9443803425 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
