ஜல்ஜீவன் திட்டத்தில் போடப்பட்ட 480 பித்தளை குழாய்கள் மாயம்

திருமங்கலம், ஜன. 7: கள்ளிக்குடி பகுதியில் ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்ட குழாய்களில் போடப்பட்ட 480 பித்தளை குழாய்கள் மாயமான சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. கள்ளிக்குடி சத்திரம் மற்றும் கே.வெள்ளாகுளம் பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தில் 1200 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு அவற்றில் பித்தளை குழாய்கள் அமைக்கப்பட்டன.

இதில் தற்போது 480 பித்தளை குழாய்கள் திருட போனது தெரியவந்தது. இது குறித்து கே.வெள்ளாகுளம் ஊராட்சியின் பம்ப் ஆப்பரேட்டர் நாராயணன்(43) கொடுத்த புகாரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: