- இந்தூர்
- எம்பி உயர் நீதிமன்றம்
- பிரதம செயலாளர்
- பாகீரத்புரா
- இந்தூர், மத்தியப் பிரதேசம்
- ஜனாதிபதி
- மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்...
இந்தூர்: மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் பகீரத்புரா பகுதியில் விநியோகிக்கப்பட்ட மாசு குடிநீர் காரணமாக 15 பேர் பலியானார்கள். 110 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுமுன்தினம் 18 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மபி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரிதேஷ் இனான வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் விஜய் குமார் சுக்லா மற்றும் அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,’ இந்தூா் விவகாரத்தில் மாநில அரசு தாக்கல் செய்த பதில் சரியில்லை. இந்தச் சம்பவம் பொதுமக்களின் நம்பிக்கையை உலுக்கியது மட்டுமல்லாமல், தேசிய அளவில் இந்தூரின் நற்பெயரையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
ஒன்றிய அரசின் வருடாந்திர தூய்மை ஆய்வில் இந்தூர் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது. தூய்மைக்குப் பெயர் பெற்ற ஒரு நகரத்தில் இத்தகைய அலட்சியம் ஒரு தீவிரமான கவலைக்குரிய விஷயம். உயிரிழப்புகள் தொடர்பான பட்டியலும் சரியில்லை. இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது.
இதில் குற்றவியல் பொறுப்பு அல்லது சிவில் பொறுப்பு உள்ளதா என்பதை நீதிமன்றம் ஆராயும். இந்த வழக்கில் மத்தியப் பிரதேச தலைமைச் செயலாளர் ஜனவரி 15 அன்று காணொலி காட்சி மூலம் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
