ஏற்காடு, ஜன.6: ஏற்காட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். “சாலை பாதுகாப்பு -நம் உயிர் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி, ஏற்காடு காவல் நிலையத்திலிருந்து தொடங்கி 20வது கொண்டை ஊசி வரை நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஹெல்மெட் கட்டாயம், சீட் பெல்ட் பயன்பாடு, மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, வேக கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும், மலைச்சாலைகளில் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்ட வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். நிகழ்ச்சியில், ஏஎஸ்பி சுபாஷ் சந்த் மீனா மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
