ஏற்காட்டில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்

ஏற்காடு, ஜன.6: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த மாதம் முழுவதும் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது. மேலும், கடும் குளிரும் வாட்டியெடுத்ததால், பொதுமக்கள் தவித்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் அடிக்க தொடங்கியது. இதனால், ஏற்காட்டில் நிலவிய கடும் குளிர் லேசாக குறைந்து காணப்பட்டது. இதற்கிடையில், ஏற்காட்டில் மீண்டும் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று அதிகாலையில் ஏற்காட்டில் 10.6 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப அளவு குறைந்ததால் கடும் குளிர் வாட்டியெடுத்தது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ- மாணவிகளின் நடமாட்டத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. தொடர்ந்து காலை 9 மணியளவில் வெயில் தலைகாட்டிய பின்னரே இயல்பு நிலை திரும்பியது.

Related Stories: