சேலம், ஜன.1: சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (2ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இடைப்பாடி நைனாம்பட்டியில் உள்ள ஸ்ரீநடராஜன் மஹால் திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் தங்கமுத்து தலைமையில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில், தைத்திங்கள் தமிழர் திருநாள் திராவிட பொங்கல், சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம் குறித்தும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த சீராய்வு குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
எனவே தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
