பேருந்து நிறுத்த பகுதியை ஆக்கிரமித்த கடைக்காரர்கள்

ஓமலூர், டிச.31: ஓமலூர் நகரம் பல்வேறு பெருநகரங்களின் இணைப்பு நகரமாக உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு பேருந்துகள் நின்று செல்லும் நிறுத்தம் உள்ளது. ஆனால், அங்குள்ள தனியார் வணிக வளாக கடைகளை பலர் வாடகைக்கு எடுத்துள்ளனர். வாடகைக்கு எடுத்த கடையை காலியாக வைத்து விட்டு, சாலையோர கழிவுநீர் கால்வாயை தாண்டி, பயணிகள் பேருந்துக்கு நிற்கும் சாலையையும் 10 அடி நீள அகலத்திற்கு ஆக்கிரமித்து கொண்டனர். பயணிகள் கடையை ஒட்டி சற்று தள்ளி நின்றால், வியாபாரம் பாதிக்கிறது, கடையை ஒட்டி நிற்க வேண்டாம், போய் சாலையில் நில்லுங்கள் என்று பயணிகளை ஆபாசமாக திட்டி, விரட்டும் சூழ்நிலை உள்ளது. அதனால், பயணிகள் ஒதுங்கி நிற்க முடியாமல், சாலையில் நின்று பேருந்தை பிடித்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தும் முன்பாக போலீசாரும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் ஆக்கிரமிப்பை அகற்றி, பயணிகள் பாதுகாப்பாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: