பைக்கில் சென்ற மூதாட்டி விபத்தில் சிக்கி பலி

சேலம், ஜன.3: சேலத்தில் ‘லிப்ட்’ கேட்டு பைக்கில் சென்ற மூதாட்டி விபத்தில் சிக்கி பலியானார். சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் காயத்துடன் இருந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்ததில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெத்திமேடு பகுதியில் பைக்கில் சென்ற ஒருவரிடம் 60 வயதான மூதாட்டி ‘லிப்ட்’ கேட்டு சென்று கொண்டிருந்தபோது பைக், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனக்கு காயம் ஏற்பட்டது’ என தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இறந்துவிட்டார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. மூதாட்டி குறித்து தகவல் தெரிந்தால், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: