கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

சென்னை: 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நாளை (ஜன.5) சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசு பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ உள்ளிட்ட 10 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு முதற்கட்டமாக லேப்டாப் – முதலமைச்சர் நாளை வழங்குகிறார். Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் லேப்டாப், Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD, Windows 11, MS Office ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் Perplexity Al வசதி 6 மாத இலவச சந்தா உடன் வழங்கப்பட உள்ளது.

Related Stories: