திருப்பதி: 2025-ம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் ரூ.1,383.9 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 2025-ம் ஆண்டில் 2.61 கோடி பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டில் 13.51 கோடி லட்டுகள் விற்பனையாகி உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
