சென்னை: தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி: நாங்கள் யாரும் சொல்லவில்லை என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் விளக்கம் அளித்துள்ளார். கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் இறுதி செய்வோம். திமுகவுடனே கூட்டணிக்கு செல்ல முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
