சென்னை: தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது என காவல் சார்பு ஆய்வாளர் பணிநியமன விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். காவலர்கள் மீதான நம்பிக்கையில்தான் மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மாநிலத்தின் அமைதி, சட்டம் – ஒழுங்கை காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை காவல்துறையினர் காப்பாற்ற வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பும் சமூக கடமையும் அதிகமாக இருக்க வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல்துறையினர் கனிவாக இருக்க வேண்டும். காவல்துறை மக்களின் நண்பன் என்பது வாசகமாக மட்டும் இல்லாமல் நிஜத்திலும் நிரூபிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். அதிகாரத்தை மக்களுக்காக பயன்படுத்தவேண்டும் என காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
