சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார். ரூ.108.90 கோடியில் 11 கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். ரூ.15.30 கோடி செலவில் 7 கோயில்களில் 10 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 6 சரக ஆய்வாளர் அலுவலகங்கள், 3 சிற்றுந்துகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
