சாலை பாதுகாப்பு மினி மாரத்தான் போட்டி

ஓமலூர், டிச.27: ஓமலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடக்கிறது. இந்த போட்டியை சேலம் மாவட்ட எஸ்பி கவுதம் கோயல் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். போட்டி நாளை(28ம் தேதி) ஞாயிற்று கிழமை காலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஓமலூர் பஸ் நிலையத்தில் தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும். இதில், 13 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு கோப்பையும், பதக்கமும் வழங்கப்படும். இதில், முதலில் முன்பதிவு செய்யப்படும் 500 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இதில், போட்டியின் தூரத்தை நிறைவு செய்பவர்களுக்கு சான்றுகள் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு அனுமதி இலவசம். முழு உடல் திறன் உள்ளவர்கள் மட்டுமே மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ளும் அனைவருக்கும், இன்று மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை காவல்துறை மண்டபத்தில் இலவசமாக டீ சர்ட் வழங்கப்படுகிறது.

Related Stories: