சாலை பாதுகாப்பு மினி மாரத்தான் போட்டி

வாழப்பாடி, டிச.27: வாழப்பாடி உட்கோட்ட காவல் துறை, வாழப்பாடி விளையாட்டு சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதனை வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வாழப்பாடி விளையாட்டு சங்க நிறுவனர் பாலமுருக சிவராமன், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஆர்வமுடன் குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories: