இளம்பெண் மீது சரமாரி தாக்குதல் ஆசாமிக்கு போலீஸ் வலை நெய் விளக்கு விற்பதில் முன்விரோதம்

ஆரணி, ஜன.3: ஆரணி அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் என்பவரது மனைவி சாருலதா(19). இவர், அதேபகுதியில் உள்ள சனிஸ்வரர் கோயில் அருகில் நெய் விளக்கு விற்பனை செய்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரும் நெய் விளக்கு விற்பனை செய்கிறார். விளக்கு விற்பனை செய்வது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சாருலதா, நந்தகுமார் இருவரும் விளக்கு விற்பனை செய்துள்ளனர். அப்போது, இருவரிடமும் பொதுமக்கள் தட்டில் விளக்கு வாங்கி ஏற்றியுள்னர். அப்போது, கோயில் அருகில் விளக்கு ஏற்றி விட்டு வைத்து சென்ற, தட்டை எடுப்பதாற்காக சாருலதா சென்றுள்ளார். அப்போது, அவரது தட்டுகளை நந்தகுமார் எடுத்துள்ளார். இதனால், சாருலதா எதற்காக எனது தட்டை எடுக்கீறர்கள் என நந்தகுமாரை கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த நந்தகுமார் திடீரென சாருலதாவை ஆபாசமாக பேசி திட்டி அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்த தப்பிசென்றார். இதில், காயமடைந்த சாருலதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து, சாருலதா களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நந்தகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: