செய்யாறு, டிச. 27: செய்யாறு அருகே 855 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விற்பனை செய்த கடை உரிமையாளரை கைது செய்தனர். திருவண்ணாமை மாவட்டம் செய்யாறு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காழியூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(35), பெட்டிக்கடையில் சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 855 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடை உரிமையாளர் ரமேஷை கைது செய்தனர்.
