சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 34 கன அடியில் இருந்து 5,983 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.35 அடியாக உள்ளது; நீர் இருப்பு 26.70 டி.எம்.சி.யாக உள்ளது.
