ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: அரசு நிலம், நீர்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அரக்கோணத்தில் பூங்காவுக்காக ஒதுக்கிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் எடுத்த நடவடிக்கை பற்றி 2 வாரத்தில் அறிக்கை தர நகராட்சி ஆணையருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

Related Stories: