சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 26 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. கடனாநதி 24 செ.மீ., தென்காசி மாவட்டம் சிவகிரி 17செ.மீ., தேனி மாவட்டம் வீரபாண்டியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ராமநதி அணை 12 செ.மீ., கோத்தகிரி 11 செ.மீ., சேரன்மகாதேவி, ஆய்க்குடியில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் 3 இடங்களில் அதிகனமழையும் 15 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 3 இடங்களில் அதிகனமழையும் 15 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது: வானிலை மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- நீலகிரி மாவட்டம்
- குன்னர்
- தென்காசி மாவட்டம் சிவாகிரி
