வைகோவின் சமத்துவ நடைபயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும், நிச்சயம் வெற்றி பெறத்தான் போகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திருச்சி: வைகோவின் சமத்துவ நடைபயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும், நிச்சயம் வெற்றி பெறத்தான் போகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காலம் தோறும் இளைய தலைமுறை நன்மைக்காகவும் எதிர்காலத்தின் நன்மைக்காகவும் செயலாற்றுவது திராவிட இயக்கம். தள்ளாத வயதிலும் தொண்டு செய்தவர் பெரியார். திராவிட இயக்க பல்கலையில் படித்தவர்தான் வைகோ. வைகோவும், நானும் திராவிட யுனிவர்சிட்டியின் மாணவர்கள்தான். கலைஞரின் பக்கத்தில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர். மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு கலைஞர் நடைபயணம் சென்றபோது வைகோ அவருடன் சென்றவர்தான் என்றும் தெரிவித்தார்.

Related Stories: