திருச்சி: வரும் சட்டமன்றத் தேர்தல் சமத்துவத்துக்கும் சனாதனத்துக்கும் இடையேயானது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சனாதன சக்திகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கவிடாமல் தடுக்கவே திமுக கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. திராவிடம் தமிழுக்கோ, தமிழர்களுக்கோ, தமிழ் தேசியத்திற்கோ எதிரானது அல்ல என்று திருச்சியில் திருமாவளவன் பேசினார்.
