பண்ணைப்புரம் பேரூராட்சியில் பூங்கா, உணவு கூடம் திறப்பு

தேவாரம், ஜன.1: பண்ணைப்புரம் பேரூராட்சியில் சமுதாய கூடத்தில் உணவு கூடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். பண்ணைப்புரம் பேரூராட்சியில் உள்ள 11வது வார்டு கரியணம்பட்டியில் ரூ.10 லட்சம் செலவில் குழந்தைகள் விளையாடும் பூங்காவும், வார்டு 8ல் மக்களின் பயன்பாட்டிற்கு சமுதாயக்கூடத்தில் உணவு கூடமும் கட்டப்பட்டது.

இதனை சட்டமன்ற உறுப்பினரும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். நிகழ்வில் உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குமரன், பண்ணைப்புரம் பேரூர் செயலாளர் இளங்கோ, பேரூராட்சி மன்ற தலைவர் இலட்சுமி இளங்கோ, துணை தலைவர் சுருளி வேல், மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: