நாகர்கோவில், ஜன. 1: சாருலயா மியூஸிக் மற்றும் டான்ஸ் அகாடமி 11 வருடங்களாக இயங்கி வருகிறது. தற்போது இந்த அகாடமி சார்பில் நாகர்கோவில் குமரி நெசவாளர் காலனி பகுதியில் சாருலயா ஃபைன் ஆர்ட்ஸ் தொடக்க விழா இன்று(1ம் தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது. விழாவில் கூடங்குளம் அணுமின் நிலைய சைட் இயக்குனர் சதீஷ் குமார், நாகர்கோவில் வெல்னஸ் கோச் டாக்டர் ஜெரால்ட் பெனோ, நாகர்கோவில் ஆர்.கே. குழும தலைவர் கணேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
மாலை 6.30 மணிக்கு சாரங்கி வாத்தியக் கலைஞர் சென்னை மனோன்மணியுடன் சாருலயா ஃப்யூஷன் பேண்டு வழங்கும் ஃப்யூஷன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் கலை, இசை, நடனம் மீது ஆர்வம் கொண்ட பொதுமக்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இத்தகவலை சாருலயா நிறுவனர் இ.ஆர்.ராம் குமார் தெரிவித்தார்.
