களக்காடு அருகே வாலிபர் தற்கொலை

களக்காடு, ஜன. 1: களக்காடு அருகே தாயார் செலவிற்கு பணம் தராததால் விரக்தியடைந்த வாலிபர், வீட்டு ஜன்னலை உடைத்து ரகளை செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். களக்காடு அருகே உள்ள ஜெஜெ நகர் மேல காலனியைச் சேர்ந்த அய்யாதுரை மகன் கதிர்வேல் ராஜா (29). இவர் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை 2 மணியளவில் கதிர்வேல் ராஜா தனது தாயார் அருள் மாலாவிடம் தனது செலவிற்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அருள்மாலா பணம் தர மறுத்து விட்டார். இதனால் விரக்தியடைந்த கதிர்வேல் ராஜா வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளை செய்துள்ளார்.அதன் பின் அவர் வீட்டு பின்புறம் உள்ள குளியல் அறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வராததால் உறவினர்கள் சென்று பார்த்த போது, கதிர்வேல்ராஜா அங்கு தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இது குறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: