சென்னை: ஜன.4, 5ம் தேதிகளில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகிறார். சென்னையில் பாஜக நிர்வாகிகள் கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தியிருந்தார். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து அதிமுகவினருடன் பியூஷ் கோயல் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
