கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், மன்னவனூர், பூம்பாறை, பெரும்பள்ளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
வனத்துறை ரேஞ்சர் பழனிக்குமார் உள்ளிட்ட ரேஞ்சர்கள், வனவர்கள், வனப்பணியாளர்கள், பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட குழுக்களுடன் இந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. இரண்டு தினங்கள் இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
