கோஷ்டி மோதல்: 4 பேர் காயம்

பண்ருட்டி, டிச. 30: பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு ஏரிப்பாளையத்தை சேர்ந்தவர் சிசுபாலன். அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர்களின் வீடுகளுக்கு இடையில் உள்ள சந்தில் சாணம் போட்டு மொழுகுவதில் இருவருக்கும் இடம்பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் அசிங்கமாக திட்டி கையாளும், இரும்பு பைப்பாலும் தாக்கிக்கொண்டனர். இதில் சிசுபாலன் (55) மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி (50) ஆகியோர் காயம் அடைந்தனர். இதேபோல் ஆறுமுகம் தரப்பை சேர்ந்த ஆறுமுகம் (62), அவரது மனைவி ஜோதி (56) ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீஸில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் இரண்டு தரப்பையும் சேர்ந்த ஆறுமுகம், ஜோதி, சிசுபாலன், ராஜலட்சுமி ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: