சேலம்: பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அன்புமணி என்னை மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டார். என்னை கொல்ல வேண்டும் என பதிவு போட்டவருக்கு அன்புமணி பொறுப்பு கொடுத்திருக்கிறார். கனவில் தனது தாயார் வந்ததாகவும் அப்போது நடந்த உரையாடல் குறிப்பிட்டு ராமதாஸ் கண்ணீர் விட்டார். அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை. சென்னையில் சொத்து தகராறில் தந்தையை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றார் மகன்; அதைவிட மோசமானது என தெரிவித்தார்.
சில்லறை பசங்கள் வைத்து ஒவ்வொரு நாளும் என்னை அவமானப்படுத்துகின்றனர். என்னை துண்டு துண்டாக வெட்டிக் கூட கொன்று இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு நாளும் சில்லறை பசங்களை வைத்து மோசமாக நடந்து கொள்கிறார்கள். பரிசோதனைக்காக செல்லும் இடத்தில் மருத்துவர்கள் கூட அன்புமணியை திட்டுகிறார்கள். 5 ஆண்டுகள் அன்புமணியால் பொறுத்திருக்க முடியாதா? என மூத்த மருத்துவர்கள் கேட்கிறார்கள். அன்புமணியை மாற்ற முடியாது, மாற்ற வழியில்லை.
95%சதவீதம் பாட்டாளி மக்கள் என் பின்னல் அணி திரண்டுள்ளனர். தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன், அந்த கூட்டணி வெற்றியை தரும் என கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. 100க்கு 2,3 பேர் கூட அன்புமணியுடன் இல்லை. கோடிக்கணக்கில் பணத்தை வைத்து பம்மாத்து வேலை செய்கிறார். எந்த பதவியையும் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்ற சத்தியத்தை நான் காப்பாற்றி வருகிறேன். பதவியை பெறுவதில்லை என்ற எனது சாத்தியதால்தான் அன்புமணி அமைச்சரானார்.
அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன் என்று ராமதாஸ் உருக்கமான கேள்வி எழுப்பினர். என்னை மோசமாக சித்தரிப்பதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். சில நேரங்களில் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை, ஏனென்றால் அன்புமணி நினைப்பு வந்துவிடுகிறது. பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தை தரவிடாமல் தடுக்க சூழ்ச்சி செய்தனர் என கூறியுள்ளார்.
