தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் வெல்லும் தமிழ்ப் பெண்கள்-தான். திராவிட இயக்கத்தால் தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும் போராட்ட வரலாற்றையும் – வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நாளை பல்லடத்தில் நடைபெறும் வெல்லும் தமிழ்ப்பெண்கள் மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு சொல்லும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு வெல்லும் தமிழ் – தென் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்கு திமுக மாநில மகளிர் அணி சார்பில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டின் தலைமை பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்கிறார். இதே நேரத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். முதல்வரின் உரையில், பெண்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் திமுக தொண்டர்கள் மற்றும் மகளிர் மத்தியில் நிலவுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் வெல்லும் தமிழ்ப் பெண்கள்-தான்! திராவிட இயக்கத்தால் தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும் போராட்ட வரலாற்றையும் – வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நாளை பல்லடத்தில் நடைபெறும் வெல்லும் தமிழ்ப்பெண்கள் மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு சொல்லும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: