வட்டிக்கடைக்காரன் போல் செயல்படும் ஒன்றிய அரசு: சீமான் தாக்கு

மதுரை: மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:மண்ணில் உழவு என்பது தொழிலாகப் பார்க்கக்கூடாது. உழவும், நெசவும் மனித வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள். அது நமது பண்பாட்டின் அடையாளம். பூமித்தாய் நமக்கு உணவளிப்பது தொழில் அல்ல. அது கொடை. மானம் காப்பவன் நெசவாளன். மானத்தை தெய்வத்திற்கு நிகராக நம் மூதாதையர்கள் வணங்குவார்கள்.

எந்த நாட்டில் உழவனும் நெசவாளனும், ஆசிரியனும் போற்றப்படுகிறானோ அது தான் நாடு. மாநில அரசு எல்லா வரிகளையும் முறைப்படி செலுத்தி விடும். மாநில அரசின் வரி எல்லாவற்றையும் ஒன்றிய அரசு வாங்கி விடும். மாநில நிதி தான் ஒன்றிய அரசின் நிதி. ஆனால் ஒன்றிய அரசிடம் நிதி கேட்டால் தராமல் வட்டிக்கடைக்காரன் போல செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: