சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுப்பு..!!

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வனவிலங்குகளின் நடமாட்டம், கால்தடங்கள், இருப்பிடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இந்த கணக்கெடுப்பு, வனவிலங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வாழ்விடங்களின் நிலையை மதிப்பிட உதவுகிறது. மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் யானைகள் மற்றும் புலிகள் போன்ற விலங்குகளின் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, பவானிசாகர், கடம்பூர், ஜீர்ஹள்ளி, விளாமுண்டி உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது. மாமிச உண்ணிகள், கால் தடம், சாணம், நேர்கோட்டுப்பாதை ஆகியவற்றின் மூலம் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. ஒரு குழுவுக்கு 4 பேர் வீதம் 75 குழுக்களாக பிரிந்து 300 வனத்துறை ஊழியர்கள் 5 நாட்கள் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

சிதம்பரம்: பிச்சாவரத்தில் 6000 பறவைகள்

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் சுமார் 6000 பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 23 வகை வெளிநாட்டு பறவைகள், 65 உள்நாட்டு பறவைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

Related Stories: