இடைப்பாடி : இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், ஓணாம்பாறை, காட்டுவளவு, செக்கானூர் செல்லும் சாலைகளில் அதிகளவில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெற்பயிர்கள் கதிர்கள் பிடித்துள்ளது.
இந்நிலையில், மலை அடிவாரப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை, இரவு நேரங்களில் காட்டுபன்றி, மான், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
மேலும் பகல் நேரங்களில் கூட்டமாக வரும் மயில் மற்றும் பறவைகளும் பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பறவை, வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க, விவசாயிகள் புடவைகளை கொண்டு வேலி போல கட்டியுள்ளனர்.
இதனால் புடவைகளை அசைவதை பார்க்கும் வன விலங்குகள் மற்றும் பறவைகள் வயலில் ஆட்கள் இருப்பதாக நினைத்து, வயலில் நுழையாமல் சென்று விடுகிறது. இதனால் வயலின் உள்ளே விலங்குகள் மற்றும் பறவைகள் நுழைவதை தடுக்க முடிவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
