×

ஓமலூர் வட்டார ஏரிகளில் மீன் பிடி ஏலம் விட கோரிக்கை

ஓமலூர் : ஓமலூர் வட்டார ஏரிகளில் மீன்பிடி ஏலம் விட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓமலூர் வட்டாரத்தில் 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஜிலேபி, கெண்டை, பாறை, ரோகு, கட்லா, பில்லுக்கெண்டை உள்ளிட்ட பலவகை நாட்டு இன மீன்கள் உள்ளன. தலைவர்கள் இருந்த போது, ஏரிகளில் மீன் பிடிக்கும் ஏலம் நடத்தி, ஊராட்சிக்கு வருவாய் ஈட்டப்பட்டது.

ஆனால், அதிகாரிகள் நிர்வாகத்தில் ஏலம் நடத்தாததால், மீன் வியாபாரிகள் பலரும் ஏரிகளில் இலவசமாக மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். தனிப்பட்ட கும்பல் சில ஏரிகளை ஆக்கிரமித்து, மீன் பிடித்து விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இதனால், ஊராட்சிக்கான நிதி இழப்பை தடுக்கும் வகையில், மீன் பிடி ஏலம் நடத்த வேண்டும், சாமானிய மக்கள் தூண்டிலில் மீன் பிடிக்க மக்களுக்கு அனுமதிக்க வேண்டும் என மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன் வளத்துறை மூலம் ஏலத்தொகை நிர்ணயித்து, மீன் பிடி ஏலம் நடத்தப்படும் என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Omalur district ,Omalur ,
× RELATED கும்பகோணம்: சீனிவாசபெருமாள்...