பெய்ஜிங் : அரிய வகை தாதுக்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா அனுமதி அளித்துள்ளது. சீன நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களும் அரிய வகை காந்த தாதுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா உரிமம் வழங்கி உள்ளது. ஜெய் உஷின் மற்றும் மகிந்திரா, மாருதி சுசூகி, ஹோண்டா மோட்டார்ஸ்க்கு தாது விற்கும் நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டது. வாகனங்கள், மின்னணு சாதனங்கள், மருத்துவத்துறை மற்றும் ராணுவ தளவாட தயாரிப்புக்கு அரிய காந்த உலோகம் பயன்படுகிறது.
