ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்: மெல்போர்னில் நடக்கிறது

 

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதல் 3 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் 4வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டியான இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 2 போட்டியிலும் கேப்டனாக செயல்பட்ட ஸ்மித், 3வது போட்டியில் உடல்நலக்குறைவால் ஆடவில்லை. அணிக்கு திரும்பிய கம்மின்ஸ் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் கம்மின்ஸ் முதுகுகாயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் எஞ்சிய 2 டெஸ்ட்டிலும் இருந்து விலகி உள்ளார். இதனால் ஸ்மித் அணியை வழிநடத்த உள்ளார். பேட்டிங், பவுலிங் என ஆஸ்திரேலியா அசுர பலத்தில் உள்ளது.

நாதன் லயன் காயம் காரணமாக விலகி உள்ளார். 2025-27ம் ஆண்டின் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டியலில் 6 போட்டியிலும் வென்று 100 சதவீத வெற்றியுடன் டாப்பில் உள்ளது. மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஹாட்ரிக் படுதோல்வி அடைந்துள்ளதால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேட்டிங்கில் ஜோரூட் மட்டும் ஒரு சதம் அடித்துள்ளார். மற்ற யாரும் பார்மில் இல்லை. பவுலிங்கும் சொல்லிக்கொள்ளுபடியாக இல்லை. எஞ்சிய 2 போட்டியில் வென்று ஆறுதல் தேட வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது. பாக்சிங் டே டெஸ்ட்டில் ஆடும் 2 அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் ஒல்லி போப்பிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜேக்கப்பெத்தேல் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணி : சாக் க்ராலி, பென் டக்கெட், ஜேக்கப் பெதெல், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டாங்.

ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் வெதரால்ட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், ஜெய் ரிச்சர்ட்சன், மைக்கேல் நெசர், பிரெண்டன் டாகெட்.

சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்க மான்டி விருப்பம்!
ஆஷஸ் தொடரை இங்கிலாந்து இழந்ததால் பயிற்சியாளர் மெக்கலம் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. டெஸ்ட்டில் அதிரடியாக ஆடும் அவரின் பாஸ்பால் அணுகுமுறை தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மாண்டி பனேசர், மெக்கல்லத்திற்கு பதிலாக இந்திய முன்னாள் வீரர் ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவை எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பதை கச்சிதமாக தெரிந்த ஒருவரை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலம், பலவீனம், திட்டங்கள், மனம் ஆகியவற்றைத் அறிந்து, அதிலிருந்து எப்படி உங்களால் சாதகத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் ரவி சாஸ்திரி இங்கிலாந்து அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக வரவேண்டும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பாக்சிங் டே என்றால் என்ன?
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். தேவாலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த பணம் உள்ளிட்டவற்றை நன்கொடையாக செலுத்துவார்கள். மறுநாள் டிசம்பர் 26ம் தேதி அன்று அந்த பெட்டியைப் பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளிய மக்களுக்கும், வறுமையில் உள்ளவர்களுக்கும் வழங்குவர். இவ்வாறு பெட்டியைத் திறக்கும் நாளைத்தான் அங்கு ‘பாக்சிங் டே’ என்று அழைக்கின்றனர். இந்த நாளில் தொடங்கும் டெஸ்ட் பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாக்சிங் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது.

புரூக் 3 ஆயிரம் ரன்….
இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் டெஸ்ட்டில் 56 இன்னிங்சில் 2993 ரன் அடித்துள்ளார். 3 ஆயிரம் ரன் இலக்கை எட்ட இன்னும் 7 ரன் தான் தேவை. அவர் இந்த ரன்னை அடித்தால் இங்கிலாந்துக்காக அதிவேமகாக டெஸ்ட்டில் 3 ஆயிரம் ரன் அடித்த 2வது வீரர் ஆவார். இதற்கு முன் டெனிஸ் காம்ப்டன் 57 இன்னிங்சில் 3 ஆயிரம் ரன் அடித்துள்ளார்.
பென் டக்கெட் 3 ஆயிரம் ரன் இலக்கை எட்ட இன்னும் 31 ரன்கள் தேவை.

தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படுதோல்விகளை சந்தித்து வரும் இங்கிலாந்துஅணிக்கு இதுமேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அவர் 3 டெஸ்ட்டில் 9 விக்கெட்வீழ்த்தி இருந்தார். பேட்டிங்கிலும் ஒரு அரைசதம் உள்பட 102 ரன் எடுத்துள்ளார்.

இதுவரை நேருக்கு நேர்…
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இதற்கு முன் 364 டெஸ்ட்டில் மோதி உள்ளன. இதில் 155ல் ஆஸ்திரேலியா, 112ல் இங்கிலாந்து வென்றுள்ளன. 97 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.

Related Stories: