போக்சோவில் கைதான வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது

மேட்டூர், டிச.19: மேச்சேரி அருகே போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் இருந்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மேச்சேரி எரகுண்டபட்டியை சேர்ந்தவர் சேட்டு மகன் மயில்சாமி (38). இவர் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தீவட்டிபட்டி காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற கொலை வழக்கில், மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததன் அடிப்படையில் சேலம் மாவட்ட கலெக்டர் நேற்று மயில்சாமியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Stories: