புதுச்சேரி : புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை அளித்துள்ளார். போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன. போலி மருந்து விவகாரத்தில் பல மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
