சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றால் ஆஜராக அவசியமில்லை. ஐகோர்ட் கிளை அமர்வில் தாக்கலான ஆட்கொணர்வு வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
காவல் ஆய்வாளரின் ஊதிய உயர்வு நிறுத்தத்தை ரத்து செய்து 2016ம் ஆண்டு வழங்கிய உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. இருவரும் ஜனவரி 12ம் தேதி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இடைக்கப்பட்ட காலத்தில் உத்தரவை அமல்படுத்தினாலோ, மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றாலோ நேரில் ஆஜராக அவசியம் இல்லை எனவும் நீதிபதி ஆஷா தெரிவிப்பு
2014ம் ஆண்டு நெல்லையில் காவல் ஆய்வாளராக இருந்த சந்திரசேகரன், ஆட்கொணர்வு வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை என அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக அவர் முறையீடு செய்திருந்தார். 621 காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தற்காலிக தேர்வு பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
