பொருநை அருங்காட்சியகத்தை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட கட்டணம் நிர்ணயம்

 

நெல்லை: தமிழகத்தின் 3,200 ஆண்டு கால வரலாற்றை பறைசாற்றும் வகையில், ரூ.56 கோடியில் நெல்லையில், பொருநை அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அருங்காட்சியனம் நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. பொருநை அருங்காட்சியகத்தை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல்லயில் பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 20ம் தேதி திறந்து வைத்தார். இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அருங்காட்சியக வளாகத்தில் வன்னி மரத்தை நட்டு வைத்து, ரிமோட் மூலம் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, எ.வ.வேலு, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அருங்காட்சியத்தில், ஆதிச்சநல்லூா் காட்சிக்கூடம்-2, சிவகளை காட்சிக்கூடம்-1, கொற்கை காட்சிக்கூடம்-2, நிா்வாக கட்டடம்-1 உள்பட மொத்தம் 7 தொகுதிகளாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பொருநை அருங்காட்சியத்தை நாளை (23.12.2025) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட வசதியாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியத்தை பார்வையிட கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர்.  பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயம். காலை 10 முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பள்ளி மாணவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டவர்களுக்கு ரூ.50 எனவும் 5D, 7D தியேட்டருக்கு தலா ரூ.25 கட்டணம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

Related Stories: