புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்: விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது காவல்துறை

 

புதுச்சேரி: புதுச்சேரியில் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. “விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சரியான முகவரி, ஆதார் பெற வேண்டும். விடுதியில் தங்குபவர்கள் யாரும் வெளியில் சுற்றக் கூடாது. அறையில் தங்குபவர்களின் முழு விவரங்களையும், காவல் நிலையத்தில் விடுதி உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவு 2 மணிக்குள் பயணிகள் தங்கும் விடுதி அறைக்குள் வந்துவிட வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட கேளிக்கை வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி நகராட்சி அறிவித்துள்ளது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இரண்டு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். கிறிஸ்மஸ் இரண்டு நாள் முன்னதாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு புதுச்சேரி கேளிக்கை நிகழ்ச்சிக்கு 25 சதவீதம் நகராட்சி வரி 18 சதவீதம் ஜிஎஸ்டி என மொத்தம் 43 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது. அதனால் பல ஓட்டல்களில் புத்தாண்டு நிகழ்ச்சியை நடத்த முடியாமல் ரத்து செய்து விட்டனர்.அதை தொடர்ந்து நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் விதமாக இந்த ஆண்டு புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு 10 சதவீதமாக வரி புதுச்சேரி நகராட்சி குறைத்துள்ளது.

அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவு இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் புதுச்சேரியில் உள்ள பிரபலமான ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதுச்சேரியில் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு புதுச்சேரி காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சரியான முகவரி, ஆதார் பெற வேண்டும். விடுதியில் தங்குபவர்கள் யாரும் வெளியில் சுற்றக் கூடாது. அறையில் தங்குபவர்களின் முழு விவரங்களையும், காவல் நிலையத்தில் விடுதி உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவு 2 மணிக்குள் பயணிகள் தங்கும் விடுதி அறைக்குள் வந்துவிட வேண்டும்

 

 

Related Stories: