சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலை.யில் போராட்ட குழுவினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
