தமிழ்நாட்டில் 2022-25ம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் 2022-25ம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து அரசின் கொள்கைகளை கண்காணிப்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. 14 ஆண்டுகள் தண்டனையை முடித்த 307 கைதிகளில் 43 பேர் முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி பெற்றுள்ளனர். பாலியல், போக்சோ வழக்குகளில் தண்டிக்கப்பட்ட கைதிகள் முன்கூட்டியே விடுதலை பெற தகுதியில்லை என தெரிவித்து வழக்கின் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Related Stories: