கள் இறக்கிய இருவர் கைது

இடைப்பாடி, டிச.19: இடைப்பாடி அருகே பக்கநாடு பூலாம்பட்டி அடுத்த கன்னிவாய்க்கால் நெடுங்குளம் பகுதிகளில் பனைமரங்களில் இருந்து கள் இறக்குவதாக பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு எஸ்ஐ மாதையன் சென்றபோது பனைமரத்தில் இருந்து கள் இறக்கிய செட்டிநாடார்(70), மாரியப்பன்(60) ஆகிய இருவரை கைது செய்து, 6 லிட்டர் பனங்கள்ளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Related Stories: