சென்னை : சென்னையில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பின் 14,25,018 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வரைவு வாக்காளர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்டதற்கு பின்னர் சென்னையில் 25,79,676 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 35.58 சதவிகிதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 35.58% வாக்காளர்கள் நீக்கம்
3-ல் ஒருவருக்கு வாக்குரிமை பறிபோனது
S.I.R-க்குப் முன்-40,04,694
S.I.R-க்குப் பின் – 25,79,676
நீக்கப்பட்டவர்கள் – 14,25,018
இறந்த வாக்காளர்கள் -1,56,555
தொடர்பு கொள்ள முடியாதோர் -27,328
இடம் மாறியோர்-12,22,164
இரட்டைப்பதிவு -18,772
மற்றவை-199
சென்னையில் SIRக்கு பிறகு ஆண் வாக்காளர்கள் – 12,47,690 பெண் வாக்காளர்கள் – 13,31,243 இதர பிரிவினர்- 743 பேர்.
