×

மாநிலங்களுக்கு நவீன ஆம்புலன்ஸ்கள் வழங்க ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, “நாட்டில் ஏற்படும் 5 லட்சம் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் 66 சதவீதம் பேர் 18 முதல் 34 வயதுக்குள்பட்டவர்கள். இது மிகவும் பயங்கரமானது, கவலைக்குரியது.

விபத்து நடந்த இடத்தை 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ்கள் சென்றடைய வேண்டும். உடனடி மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றிருந்தால் 50,000 பேரின் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். எனவே, சாலை விபத்து நடந்த இடத்தை 10 நிமிடங்களுக்குள் சென்றடையும் விதமாக நவீன ஆம்புலன்ஸ்களை மாநிலங்களுக்கு வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு வேகமாக செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை ரஹ்வீர்களாக அறிவித்து கவுரவிப்பதுடன், தலா ரூ.25,000 பரிசு வழங்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

Tags : Union government ,New Delhi ,Union Road ,Minister ,Nitin Gadkari ,Rajya Sabha ,
× RELATED காற்று மாசு அதிகரிப்பை கருத்தில்...